ETV Bharat / state

மேல்முறையீடு வீண் முயற்சி, ஒதுங்கி கொள்வது நல்லது -சசிகலாவுக்கு ஜெயக்குமார் அறிவுரை - Jayakumar speech about Sasikala

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தொடர்ந்து தோல்வியைக் கண்டு வரும் நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ex-minister-jayakumar-says-sasikala-will-appeal-is-futile-attempt-and-it-is-better-for-sasikala-to-stay-away-from-politics சசிகலா மேல்முறையீடு என்பது வீண் முயற்சி; அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கி கொள்வது தான் நல்லது - ஜெயக்குமார் பேட்டி
ex-minister-jayakumar-says-sasikala-will-appeal-is-futile-attempt-and-it-is-better-for-sasikala-to-stay-away-from-politicsசசிகலா மேல்முறையீடு என்பது வீண் முயற்சி; அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கி கொள்வது தான் நல்லது - ஜெயக்குமார் பேட்டி
author img

By

Published : Apr 12, 2022, 8:34 AM IST

Updated : Apr 12, 2022, 11:50 AM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.கே.சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், நேற்று மாலை (ஏப்ரல்.11) சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெறக் கூடிய சூழலில், தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்கக்கூடிய இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது.
அதிமுக கைப்பற்றும் முயற்சி சசிகலாவிற்கு தொடர்ந்து தோல்வியைக் கொடுத்து வரும் நிலையில், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது.
தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் நாங்கள் தான் அதிமுக என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா மேல்முறையீடு செய்வேன் என்பது வீண் முயற்சி தான் என கூறினார்.

மேல்முறையீடு வீண் முயற்சி, ஒதுங்கி கொள்வது நல்லது -சசிகலாவுக்கு ஜெயக்குமார் அறிவுரை

மேலும், நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் கிடையாது என்பது தான் முடிவு. சசிகலாவின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீர் போல தான். பாஜக உடன் கூட்டணி வைத்திருப்பது எந்தவொரு கட்டாயமும் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என பிரதமரே கூறியிருக்கிறார்.

இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தமிழ் வரும்போது அதை விட உலகத்தில் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. அந்த நாள் வரவேண்டும்." என்று தெரிவித்தார். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்ப்பை வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கோலாகலமாகக் கொண்டாடினர்.

அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கி கொள்வது தான் நல்லது - ஜெயக்குமார் பேட்டி

இதையும் படிங்க: 'உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' - சசிகலா

Last Updated : Apr 12, 2022, 11:50 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.