ETV Bharat / state

‘ஓபிஆர் வெற்றிக்கு தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுதான் காரணம்..!’ - இளங்கோவன்

சென்னை: "தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றிக்கு தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுதான் காரணம்" என்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

evks
author img

By

Published : May 26, 2019, 3:51 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பறிய நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், ரவீந்திரநாத்தின் வெற்றிக்குப் பின்னால் பெரும் சதி நடந்திருப்பதாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டி வருகிறார். இது குறித்து ஈடிவி பாரத் செய்திக்காக அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

“நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் என்னைத் தவிர ஒன்பது பேரும் வெற்றி பெற்றுள்ளனர். திருஷ்டிக்காக நான் தோல்வி அடைந்துள்ளேன். என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. உண்மையான தோல்வி இல்லை. அதிகாரம், பண பலம் கொண்டு என்னை தோற்கடித்து விட்டார்கள். பன்னீர்செல்வம் மகன் போட்டியிடுகிறார் என்று தேனி தொகுதியில் தேர்தல் ஆணையம் சில தில்லு முள்ளு செய்துள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணம் சுனாமியாக அங்கு புழக்கத்தில் இருந்தது.

தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் மோடி. பொன் ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, தமிழிசை மீது இல்லாத காதல் ஓபிஎஸ் மீது மோடிக்கு உள்ளது. அதனால்தான் அவரது மகனை வெற்றிபெற வைத்துள்ளார். நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் பற்றி வழக்கு தொடருவோம். இது குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறோம்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது. தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், பல பத்திரிகைகள் என்று அனைத்தும் மோடிக்கு ஆதரவாக இருந்தது. திமுக கூட்டணி 37 பேரை வைத்து தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று தருவார்கள்.

காங்கிரஸின் இந்த தோல்விக்கு ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது ஏற்றுக் கொள்ள முடியாது. அமமுகவை மக்கள் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை. ஆர்கே நகர் தொகுதி தேர்தல் வெற்றியை வைத்து தினகரன்தான் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துள்ளார். தமிழ்நாட்டைப் போல் மற்ற மாநிலங்களிலும் ராகுலை தலைவராக முன்மொழிந்திருந்தால் மோடி படுதோல்வி அடைந்திருப்பார்” என்றார்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்..

 அப்போது பேசிய அவர்,

நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர் திருஷ்டிக்காக நான் தோல்வி அடைந்துள்ளேன்.

என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. உண்மையான தோல்வி இல்லை. அதிகாரம், பணம் பலம் கொண்டு என்னை தோற்கடிக்கவிட்டார்கள். 

பன்னீர்செல்வம் மகன் போட்டியிடுகிறார் என்று தேனி தொகுதியில் தேர்தல் ஆணையம் சில தில்லு முள்ளு செய்துள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணம் சுனாமியாக அங்கு புழக்கத்தில் இருந்தது. 

மேலும் தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் மோடி.
பொன் ராதாகிருஷ்ணன் ,ஹச் ராஜா,தமிழிசை மீது இல்லாத காதல் ஓ.பி.எஸ் மீது மோடிக்கு உள்ளது என்றும் அதனால்தான் அவரது மகனை வெற்றிபெற வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார் 

நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் பற்றி வழக்கு தொடருவோம். இது குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறோம்.

வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடியின் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்றார்.  மேலும் தமிழகம் மற்றும் கேரள மக்களை கொன்று வட இந்திய மக்கள் தெளிவாக இல்லை என்றார்.

 தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் பல பத்திரிக்கைகள் என்று அனைத்தும் மோடிக்கு ஆதரவாக இருந்தது.

திமுக கூட்டணி 23 பேரை வைத்து தமிழகத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று தருவார்கள்.
காங்கிரஸின் இந்த தோல்விக்கு ராகுல் காந்தியை தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்படாது என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் ஒரு கட்சியாக பார்க்கவில்லை ஆர்கே நகர் தொகுதி தேர்தல் வெற்றியை வைத்து தினகரன் தான் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துள்ளார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் போன்று மற்ற மாநிலங்களிலும் ராகுலை பிரதமர் ஆக முன்மொழிந்து இருந்தால் மோடி தோற்று இருப்பார் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.