சென்னை: நடிகர் பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள D3 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசுகையில், நியாபகம் வந்ததடா அந்த நாள் நியாபகம் வந்தது. உங்களை எல்லாம் பார்க்கும் போது சென்னை 600028 படத்தின் பாடல் தான் நியாபகம் வருகிறது என பாடல் பாடி காட்டினார். ரொம்ப நாள் ஆகிறது இது போன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு என்றார். அப்பாவின் கடைமை என்று தான் நான் அரசியலுக்கு வந்தேன். கடமையாக மட்டும் இல்லாமல் சேவையாகவும் செய்து வருகிறேன் என தெரிவித்தார். வியாபாரம் மற்றும் அரசியல் என இரண்டிலும் மேலும் மேலும் வளர வேண்டும் என தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறேன் என கூறினார்.
இதையடுத்து இயக்குநர் மோகன் ஜி பேசுகையில், சமூக பிரச்சனைகள் சார்ந்து படம் எடுத்தால் தான் வியாபாரம் ஆகிறது. நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக வியாபாரம் ஆகிவிடுகிறது. சாதாரண படம் எடுப்பவர்களுக்கு எளிதில் ஓடிடி வியாபாரம் கிடைப்பதில்லை. இன்னும் ஒரு 4 படம் சினிமாவில் செய்வேன் என்று நினைக்கிறேன். பகாசூரன் படன் ரிலீஸ் ஆகும் போது 80 சதவீதம் திரையங்குகள் நிரம்பி விடும். யாரும் பண்ண முடியாத படம் பகாசூரன் என்றார்.
பின்னர் கூல் சுரேஷ் பேசுகையில், STR-ன் பத்து தல கூல் சுரேஷ் என்றால் சொட்ட தல.. என்று ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதை நான் பாசிடிவ் ஆக தான் எடுத்து கொள்கிறேன். இனிமே எனது டயலாக் STR-ன் பத்து தல கூல் சுரேஷ் நா கெத்து தல. தடைகல் வந்தால் அதை படி கல்லாக போட்டு முன்னேறி செல் என்று என் குரு T.ராஜேந்திரன் கூறியிருக்கிறார். அதன்படி நான் பயணித்து கொண்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.
கரோனா காலத்தில் எனது குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை கட்டினார் எம்பி விஜய் வசந்த் என்று கூறி அழுதபடியே கீழே விழுந்து வணங்கினார் கூல் சுரேஷ். மேலும் ஆண்களை கட்டி பிடிப்பதால் ஹோமோ செக்ஸ் செய்கிறார் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளின் இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த்!