சென்னை திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிகளுக்கான பாஜக பொறுப்பாளர் குஷ்பு கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், "கரோனா காலத்திலும் மத்திய அரசு வரிகளை உயர்த்தவில்லை. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. பல்வேறு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய சூழலில் பெட்ரோல் விலை கூடினாலும் விரைவில் விலை குறையும்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக எங்கு போட்டியிட்டாலும் வெற்றி உறுதி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்