ஆரம்பித்தது ஒலிம்பிக்
கரோனா பரவலால் தள்ளிப்போன டோக்கியோ ஒலிம்பிக் இன்று முதல் தொடங்கியது. இதன் தொடக்க விழா இந்திய நேரப்படி 4.30 மணி அளவில் நடக்கவிருக்கிறது.
அசாம் செல்கிறார் அமித் ஷா
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று அசாம் செல்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வட கிழக்கு மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலர், டி.ஜி.பி.,க்களை, நாளை சந்தித்து பேசவிருக்கிறார்.
துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் 27ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மூன்றாவது ஒருநாள் போட்டி
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் 3 மணிக்கு தொடங்குகிறது.