ETV Bharat / state

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு - இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கு காணலாம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நிகழ்வுகள்இன்றைய முக்கிய நிகழ்வுகள்
author img

By

Published : Apr 8, 2021, 7:04 AM IST

Updated : Apr 8, 2021, 7:13 AM IST

1. மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் கலந்துரையாடுகிறார்.

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

2. கோபி அன்னான் பிறந்த தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக இருந்த கானாவைச் சேர்ந்த கோபி அன்னான் பிறந்த நாள் இன்று. கடந்த 1997 ஜனவரி 1ஆம் தேதிமுதல் 2006 டிசம்பர் 31 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கோபி அன்னான் பிறந்த தினம்
கோபி அன்னான் பிறந்த தினம்

3. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன. இந்தாண்டு தொடக்கத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையில் பள்ளிகள் திறப்பட்டன. கரோனா மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடந்துவந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக இரண்டு நாள்கள் விடுமுறை விடப்படிருந்தது. இன்று மீண்டும் பள்ளிகள் தொடங்குகின்றன.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

4. சென்னை பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா அரங்கம் முழுவதும் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கிருமிநாசினி தெளித்து சுத்தம்செய்யப்பட்டுள்ளது.

தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அனைவரும் அமரவைக்கப்படுவார்கள். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித், மூன்று பேருக்கு முனைவர் பட்டங்களை வழங்குகின்றார்.

சென்னை பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா

Last Updated : Apr 8, 2021, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.