ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்கும் ராகுல் காந்தி, கரோனா நெருக்கடிக்கு மத்தியில் 19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் என நீள்கிறது இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு...

News today - Jun 19
News today - Jun 19
author img

By

Published : Jun 19, 2020, 6:47 AM IST

1. பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்ல தடை - கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

இன்றுமுதல் வரும் 30ஆம் தேதிவரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. சுற்றளவிலுள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருள்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்ல தடை - கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

2. எல்லை விவகாரம்: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இவ்விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

எல்லை விவகாரம்: பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

3. உயிர்நீத்த வீரர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ராகுல்!

இந்திய-சீன எல்லையில் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்காகத் தன்னுடைய 50ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவிர்த்துள்ளார்.

உயிர்நீத்த வீரர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்த ராகுல்!

4. 19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல்!

கரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்கள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்கண்ட்டில் 2 இடங்கள், மேகாலயா, மிசோரம், மணிப்பூர் ஆகியவற்றில் தலா 1 இடங்கள் இவற்றில் அடங்கும். இத்தேர்தலில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதித்ராய சிந்தியா போட்டியிடுகிறார். காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல்!

5. அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்றுமுதல் சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும்.

5. அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!
அம்மா உணவகங்களில் உணவு இலவசம்!

6. ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணை ரத்துசெய்யக்கோரிய வழக்கு விசாரணை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பட்டியிலினத்தவர்களை அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். ஆனால் உடனடியாக அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இதனை ரத்துசெய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது.

6. ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்துசெய்யக்கோரிய வழக்கு விசாரணை
ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துசெய்யக்கோரிய வழக்கு விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.