1. பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு சிலை அமைக்க ஓபிஎஸ் வேண்டுகோள்!
பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம், நினைவு மண்டபம், முழு உருவச் சிலை அமைக்க மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
2. சிவாஜி கணேசன் பிறந்த நாள் - ஸ்டாலின் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
3. ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்?
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பது தொடர்பான ஏலத்தில், டாடா நிறுவனம் வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
4. டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5. சிவாஜிக்கு கூகுள் வைத்த டூடுல்
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று (அக்.1) கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
6. 'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'
குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோதும் நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
7. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானம் இருந்தால் அது இனி 'கட்'
அரசுப் புறம்போக்கு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு இனி நீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கப்பட மாட்டாது எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
8. ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்; பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!
76ஆவது வயதில் அடியெடுத்துவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
9. மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும் தல-தளபதியின் முதல் நாயகி!
விஜய்யின் முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
10. ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.