ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - latest tamil news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11AM
11AM
author img

By

Published : Jun 30, 2021, 10:59 AM IST

’சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் பாலமாகச் செயல்படுவேன்’ - பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படப்போவதாகத் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆவின் முறைகேடுகள்: முழுமையான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கறுப்புக் கொடியுடன் ஆற்றில் இறங்கி உழவர்கள் போராட்டம்

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் கறுப்புக் கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடைபெறுகிறார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஜே.கே. திரிபாதி!

சென்னை: தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவரும் ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுபெறுகிறார்.

இ-மெயில் மூலம் மாணவிகளிடம் பேசிய சிவசங்கர் பாபா: இ-மெயிலை முடக்கிய சிபிசிஐடி!

சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேச பயன்படுத்திய இ-மெயிலை சிபிசிஐடி அலுவலர்கள் முடக்கியுள்ளனர்.

நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி: வரலாற்றை விளக்கும் கண்காட்சி

வேலூர்: அரசு அருங்காட்சியகத்தில் சிப்பாய் புரட்சி வரலாற்றை விளக்கும் கண்காட்சி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக்கூட்டம் இன்று(ஜூன் 30) காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

மகனைப் பறிகொடுத்த 12 நாள்களில் கணவரையும் இழந்த சீரியல் நடிகை

நடிகை கவிதாவின் மகன் உயிரிழந்து 12 நாள்களே ஆன நிலையில் அவரது கணவரும் நேற்று (ஜூன் 29) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சாணிக் காயிதம்' அப்டேட்டை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.