மோடியை சந்திக்கும் பன்வாரிலால்:
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று (ஜூலை 10) பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.
சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று (ஜூலை 10) தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் 21 மணிநேர குடிநீர் விநியோகத் தடை:
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (ஜூலை 10) காலை 11 மணி முதல் நாளை (ஜூலை 11) காலை 6 மணி வரை 21 மணிநேர குடிநீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அரசை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்:
யாழ்ப்பாணத்தில் அரசுக்கு எதிராக புதிய ஜனநாயக மாக்சிஸ் லெலினிசக் கட்சி சார்பாக இன்று (ஜூலை 10) கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஜூலை 10) மாலை வெளியாகவுள்ளது.
மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 10) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.