மருத்துவர்கள் குழுவுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று(மே.22) அனைத்து சட்டப்பேரவை கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் நடக்கிறது. பின்னர் மருத்துவர்கள் குழுவுடன் முதலமைச்சர் கலந்தாலோசிக்கவுள்ளார்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு!
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் இன்று (மே.22) மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டம்!
தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (மே 22) நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
கோயம்புத்தூரில் 5 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
கோயம்புத்தூரில் கரோனா தடுப்பூசி போடும் பணி, சில நாட்களாக தடைபட்டிருந்தது. தற்போது அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், 45 வயது மேற்பட்டவர்களுக்கு, ஐந்து இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று (மே.22) மீண்டும் தொடங்குகிறது.