ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 20, 2020, 8:51 PM IST

1. ரூ.103க்கு கோவிட்-19 பாதிப்பை குணப்படுத்த புதிய மருந்து - இந்தியாவில் அறிமுகமானது!

டெல்லி : கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபேபிஃப்ளூ என்ற ஆன்டிவைரஸ் மருந்தை க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2. தமிழ்நாட்டில் ஒரே நாாளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா சோதனை

சென்னை: மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 186 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

3. உறவினர்களால் கைவிடப்பட்ட பாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள்!

திண்டுக்கல்: சேதமடைந்த மண் வீட்டில் வசித்தவந்த பாட்டிக்கு ஃபேஸ்புக் மூலம் இணைந்த இளைஞர்கள் புது வீடு கட்டிக்கொடுத்துள்ளனர்.

4. கோழிகள் மூலம் கோவிட்-19 பரவுகிறதா?

போபால்: ப்ராய்லர் கோழிகளிலிருந்து கரோனா வைரஸ் பரவுவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவரும் செய்திகள் ஆதாரமற்றவை என்று மத்தியப் பிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

5. இந்தியா - சீனா மோதல்: காணொலி வெளியிட்டு கேள்வி எழுப்பிய காங்கிரஸ்!

இந்தியா - சீனா மோதல் குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரையும், அது தொடர்பாக அவருடைய அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டிருப்பது ஏன் என காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

6.கோவிட்-19 பரப்புரையின் மூலம் இந்தியர்களின் தகவல்களை திருட முயல்கிறதா வடகொரியா ?

டெல்லி : இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் ரகசியத் தகவல்கள் வட கொரியாவின் லாசரஸ் ஹேக்கர்ஸ் குழுவினரின் இணையவழித் தாக்குதலில் திருடப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.சுஷாந்த் குடும்பத்தினருக்கு மத்திய சட்ட அமைச்சர் நேரில் ஆறுதல்

நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

8. ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் மாற வாய்ப்பு!

டெல்லி: நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதை கருத்தில் கொண்டு விமான சேவைகளுக்கான கட்டணம் ஆகஸ்ட் 24க்குப் பின்பு மாறுதல்களுக்கு உள்ளாகலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் பி.எஸ். கரோலா தெரிவித்துள்ளார்.

9. தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறதா 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்?

திருவாரூர்: தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

10. சூடாமணி சூரிய கிரகணத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

டெல்லி : நாளை நிகழவிருக்கும் சூடாமணி சூரிய கிரகணம் எப்போது தோன்றுகிறது, எந்தெந்த இடங்களில் இது தெளிவாகத் தெரியும் உள்ளிட்ட தகவலை தெரிந்துகொள்வோம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.