ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - பஞ்சாப் முதலமைச்சர்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm

author img

By

Published : May 17, 2020, 9:02 PM IST

இ-வித்யா இணைய கல்வி, 1 முதல் 12 வரை டிவி சேனல்கள்! அதிரடி காட்டிய நிதியமைச்சர்

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தனி கல்விச் சேனல் தொடங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க இ-வித்யா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆம்பன் புயல் மே20 அன்று மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும்! - உள்துறை அமைச்சகம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் தென்கிழக்காக நகர்ந்து அதிதீவிர புயலாக மாறவாய்ப்புள்ளது எனவும், மே 20ஆம் தேதி மேற்கு வங்க கடற்கரை, வங்கதேச கடற்கரை பகுதி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ரூ. 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் என்ன? கமல்ஹாசன் கேள்வி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக நாட்டு மக்களுக்கும், தொழில்துறையினருக்குமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ. 20 லட்சம் கோடியில் நேரடி பயன் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - நாளை ஆலோசனை!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாகை துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகப்பட்டினம்: ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

'ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - பழங்குடியின மாணவியின் மருத்துவ கனவுக்கு இனி தடையில்லை'

கோவை : சாதிச் சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழக்கவிருந்த மாணவிக்கு, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

குடும்பத்தினர் கண்முன்னே பத்திரிகை நிருபர் கொலை!

திருச்சி: குடும்பத்தினர் கண்முன்னே பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுவராஜ் சிங்கின் சேலஞ்ச்சை காலிசெய்த சச்சின்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்று ‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கும் பஞ்சாப் முதலமைச்சர்

சண்டிகர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா நிலவரம்: 12 மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

டெல்லி: கரோனா பாதிப்பு அதிகமுள்ள 12 மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுடான் ஆய்வு மேற்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.