ETV Bharat / state

மிரட்டும் "கரூர் கம்பெனி".. அலறும் ஊழியர்கள் டாஸ்மாக்கில் நடப்பது என்ன? - dmk

டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெறும் அடாவடி வசூல்களால் ஊழியர்கள் அனுதினமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறுகிறார் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளரும், சி.ஐ.டி.யுவின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான கே.திருச்செல்வன்.

டாஸ்மாக்கின் தற்போதைய நிலை என்ன?: ஈடிவி பாரத் சிறப்புத் தொகுப்பு!

author img

By

Published : Jan 16, 2023, 7:18 PM IST

சென்னை: "டாஸ்மாக்" மதுவிற்பனையை அரசு ஏற்று நடத்த துவங்கியதிலிருந்து ஒவ்வொரு "குடி"மகனுக்கும் பரிச்சயமான அரசுத் துறையாகிவிட்டது. கையில் இருநூறு ரூபாயுடன் பச்சை போர்டை தேடிச் செல்லும் குடிமகன்களுக்கு, பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்கும் சேல்ஸ்மேன் வில்லனாகத் தான் தெரிவார். ஆனால் ஊழியர்களின் நிலைமை அதிலும் மோசம் என்கிறார் திருச்செல்வன். டாஸ்மாக்கில் நடப்பது என்னவென்பது குறித்து ஈடிவி பாரத்திடம் அவர் நடத்திய உரையாடலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

திருவல்லிக்கேணியில் உள்ள தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் திருச்செல்வனை சந்தித்த போது, டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள், குறித்து ஆதங்கத்துடன் கொட்டித் தீர்த்தார்.

இரட்டிப்பான மதுக்கடைகள்: "மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுவந்த காந்தியவாதி சசிபெருமாள் செல்பொன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்களில் டாஸ்மாக் முக்கிய பேசுபொருளானது. முன்னதாக 2011 ஆம் ஆண்டிலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் முதல் கையெழுத்துக்காக 500 கடைகள் மூடியும், நேரத்தை குறைத்தும் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 500 கடைகளை மூடினார். தமிழ்நாட்டில் 6800 மதுக்கடைகள் இருந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மது கடைகளை காரணமாக பல்வேறு விபத்துகள் நடப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 3300 கடைகள் மூடப்பட்டது. இதன் காரணமாக தற்போது 2500 கடைகள் தான் இருக்க வேண்டும்.

திமுக அரசில் ஆயிரம் புதிய மது கடைகளுக்கு அனுமதி: உச்சநீதிமன்றம் தடை விதித்த மதுக்கடைகளை மூடிய நிலையிலும் தற்போது 5800 கடைகள் உள்ளது. இதற்கு காரணம் மூடிய மது கடைகளை சுடுகாடு, வேளாண் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் புதிய மது கடைகளை தற்போதைய அரசு திறந்து வைத்துள்ளது. "2016 தேர்தலை முன்னிட்டு அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றி கிடைத்து ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நாங்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை டாஸ்மாக் கடைகளை மூடுவதாகத் தான் இருக்கும்" என்றார்.

மதுக்கடைகளின் தீய விளைவுகள் முன்பை விடவும் தற்போது மோசமாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தி.மு.க அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகப் போகிறது! மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக ஏற்கனவே தம் தந்தையார் அளித்த வாக்குறுதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்.

ஆனால் தற்போது, டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை கூட பொருட்படுத்த்வதில்லை! விற்பனையை இன்னும், இன்னும் அதிகப்படுத்தவே வெறியோடு இயங்குகிறார்கள்! பெருமழை, புயல், வெள்ளம் வந்தால் கூட டாஸ்மாக்கிற்கு மட்டும் விடுமுறை கிடையாது! டாஸ்மார்க் கடைகளை மூடாமல் இரு அரசுகளுமே இப்படித் தான் உள்ளன! இதற்கு காரணம் அதில் இருந்து கொட்டும் பணமழை தான் என குற்றம் சாட்டுகிறார் திருச்செல்வன்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மதுப் பழக்கத்தால் 7000 நபர்கள் மரணம்: டாஸ்மாக் ஊழியர்களை பிழிந்து எடுத்து சட்டத்துக்குப் புறம்பாக வேலை வாங்குகிறார்கள் என குற்றம் சாட்டும் திருச்செல்வன், கடந்த 19 ஆண்டுகளில் மது குடித்து உடல் உறுப்புகள் கெட்டு இறந்துபோன டாஸ்மாக் ஊழியர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 7000 என அதிர வைக்கிறார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். மேலும் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படவில்லை். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், அரசு இது குறித்து பரிசீலனை செய்யவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் 'கரூர் கம்பெனி' என்ற பெயரில் மிரட்டல்?: கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத புது அபாயத்தை அண்மைக்காலமாக டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர். அதிகாரிகள் மட்டத்தில், அரசியல்வாதிகள் மட்டத்தில் கோடிக்கணக்கில் கமிஷன், லஞ்சம் இருப்பதெல்லாம் டாஸ்மாக்கில் எல்லா ஆட்சியிலும் இருப்பது தான். ஆனால், இந்த ஆட்சியில் தான் ஊழியர்களிடமே அடித்து பறிக்கும் அநியாயத்தை பார்க்கிறோம் எனும் திருச்செல்வன் . டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்பு குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

கரூர் கம்பெனியிலிருந்து பேசுகிறோம் என்று கூறும் அந்த அழைப்புகளில், "ஒவ்வொரு பாட்டிலுக்கும் இவ்வளவு கமிஷன் எங்களுக்கு வேண்டும்" என்று மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. பல மாவட்டங்களில் ஊழியர்கள் மிரட்டப்பட்டதால் பதிவான செல்போன் எண்களுடன் மிரட்டியவர்களின் பெயர் விவரத்தையும் இணைத்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.

டிஜிபி சைலேந்திரபாபுவிடமும் புகார் கொடுத்தோம். முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரனிடமும் புகார் கொடுத்தோம். 2 மாதங்கள் கடந்து விட்டன! கடுகளவு நடவடிக்கையும் இல்லை. இதிலிருந்து இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும். மேலும் இதுகுறித்து தற்போது வரை துறை சார்ந்த அமைச்சர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து மறுப்பு தெரிவிக்காதது ஆச்சரியத்தை எழுப்புகிறது என தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் ஊழல்: டாஸ்மாக் அருகில் பார்கள் இல்லையென்றால் பலருக்கும் குடிக்கும் ஆர்வம் வராது. வீட்டில் எடுத்து போய் குடிக்கவும் முடியாது. ஆகவே பார்கள் குடிப்பவர்களை தூண்டில் போட்டு இழுக்கிறது என்பது உண்மையே! மற்றும் இவற்றின் அருகே செயல்படும் பார்கள் வாயிலாக காவல்துறை, கலால் துறை, உணவுபாதுகாப்புத் துறை என்று பல மட்டங்களுக்கு கமிஷன் பணம் வெள்ளமாக பாய்ந்து கொண்டு இருக்கிறது.

சட்ட விதிகள்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள சுமார் 300 மதுக்கடைகள் பார்கள் இருக்கக் கூடாது. ஆனால், அனைத்து கடைகள் அருகிலும் சட்ட விரோத பார்கள் செயல்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு குடி நோயாளி இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. பெண்கள், சிறுவர்கள் எல்லாம் கூட மதுவிற்கு அடிமையாகிறார்கள்.

விதிமீறல்: மது விற்பனைக்கூடங்களில் அருகில் அடுப்பு இருக்கக் கூடாது என விதி உள்ளது. பார்களில் அடுப்பு கூடாது அங்கு உணவு சமைத்து தரக் கூடாது என ஒரு விதியை வைத்துள்ளார்கள்!. ஆனால், எல்லா பார்களும் அசைவ ஓட்டல்களாகத் தான் உள்ளன! இந்த விதிமீறலுக்கு அதற்குதக்கவர்களை கவனத்துவிடுவார்கள்! குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமாக திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் செய்யும் பார்களிடம் இருந்து லம்பாகப் மேலிடத்திற்கு பணம் போகும்.

மேலும் இன்று வரை உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வரை மதுக் கூடங்களில் செய்யப்படும் உணவு குறித்து இதுவரை ஆராயப்பட்டாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை லாபம் தரும் டாஸ்மாக்: ஒரு மது பாட்டில் விற்பனையாகும் நூறு ரூபாயில் 87 ரூபாய் வரியாக அரசுக்கு போகிறது. மேலும் தினம் தோறும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூபாய் நோட்டாக 150 கோடி அளவுக்கு பணத்தை கையாளுகிறோம். மேலும் தற்போது நவீனமாக உள்ள ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது டாஸ்மார்க் கடைகளில் இல்லை. டாஸ்மாக்கில் உரிய பாதுகாப்பு வசதியோ இல்லை. ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மட்டுமே அரசுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

பெருலாபம் தரும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழியர்கள் நிலை என்ன?: 2003-ல் டாஸ்மாக் மதுக்கடைகளின் சூப்பர்வைசர் பதவிக்கு ஆட்கள் எடுத்தபோது, எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.காம், போன்ற முதுநிலை பட்டதாரிகளும் பி.இ. போன்ற பொறியியல் படித்தவர்களும் ஓடிவந்து பணியில் சேர்ந்தார்கள். அரசு நிறுவனம் ஆயிற்றே என்றாவது ஒரு நாள் விடியல் வரும் என்ற நம்பிக்கையில் பல்லை கடித்துக் கொண்டு பணி செய்தார்கள். தினமும் 16 மணி நேரம் வேலை, மாதம் 4000 சம்பளம். உலகில் எங்குமே நடக்காத உழைப்பு சுரண்டலை தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனமே செய்தது.

இதனால் தான் டாஸ்மாக் ஊழியர்களுக்காக சங்கத்தை 2006 ஆம் ஆண்டு தொடங்கினோம். தொழிலாளர் நலத்துறையை நாடி நீதிகேட்டோம். தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினோம்‌. கூடுதல் நேர வேலை, வாரவிடுமுறை இல்லை. இப்படி அடுக்கடுக்காக அரசு நிறுவனமே தொழிலாளர்களிடம் நடந்து கொண்டதைப் பார்த்த நீதிமன்றம் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டது. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் மேல்முறையீடு சென்று கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

முதுநிலை படித்துவிட்டு 2003 ஆம் ஆண்டு சூப்பர் வைசராக சேர்ந்த ஒருவர் அப்போது பெற்ற சம்பளம் ரூ.4000. 19 வருடங்கள் கழித்த பிறகு, இப்போது அவர் பெறும் சம்பளம் 13,750. விற்பனையாளர் பெறும் சம்பளம் 11,600. உதவியாளர் பெறுவது 10,500. இப்போது ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டி விட்டது.

மனைவி, இரண்டு குழந்தைகள் வைத்திருக்கும் ஒரு டாஸ்மாக் ஊழியர் வீட்டு வாடகை, குடும்ப செலவு, கல்விக்கட்டணம், பண்டிகைகளுக்கு புத்தாடை வாங்குவது அனைத்தையும் இதற்குள்ளேயே அடக்க வேண்டும். பெரும்பாலான ஊழியர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர். தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவ திட்டத்திலாவது சேர்த்து விடுங்கள் என்று கேட்டுப்பார்த்தோம். அதற்காக செலவிட வேண்டிய தொகை குறைவே ஆனாலும் கிடையாது.

டாஸ்மாக்கில் கடைகளில் சில்லரை பாக்கி பிரச்சனை?: டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்பட உயர் அதிகாரிகள் கமிஷன் பணத்தில் குளிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் சரக்குகள், குறைந்திருந்தாலோ உடைந்து போனாலோ ஊழியர்கள் தான் பொறுப்பு. மேலும், சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் படியளக்க வேண்டியுள்ளது. ஒரு சின்ன இடமாறுதல் வேண்டும் என்றால் கூட, லட்சக்கணக்கில் பணம் பறிக்கிறார்கள்! கிடைக்கும் சம்பளம் குடும்பம் நடத்தவே போதாத நிலையில், இதனை சமாளிப்பதற்காக ஒரு சிலர் இவ்வாறு செய்கின்றனர்.

தமிழ்நாட்டு சரக்கு, மேல்நாட்டு சரக்கு உள்ள வித்தியாசம் என்ன?: மது கடைகளைத் தேடி வருவோர் பெரும்பாலும் தினக் கூலிகள் ஆவர். அயல்நாடுகளில் பழச்சாறுகள் மூலம் மது தயாரிக்கிறார்கள். அங்கு அது உடல் ஆரோக்கியத்துக்கு பயன்படுகிறது. ஆனால், இங்கு மது தயாரிக்கப் பயன்படுத்துவது "முலாசஸ்"சும் "எத்தனாலும்" தான். இதில் ஆல்ஹாகால் சற்று அதிகமாக உள்ளதாக சொல்லபடுகிறது. இதை தினமும் குடிப்பவர்களின் குடல், கல்லீரல், கிட்னி, இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகள் கதி என்ன ஆகும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு சரியான வல்லுநர்கள் குழு இருப்பதாகத் தெரியவில்லை.

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட நேரத்தில் களை கட்டும் கல்லா: குறிப்பாக பொங்கல் பண்டிகை தீபாவளி பண்டிகை மற்றும் புத்தாண்டு தினங்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.464 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு புத்தாண்டு விற்பனையாக தமிழ்நாட்டில் ரூ.315 கோடி மதிப்பீட்டில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை தினங்களில் சுமார் ஆயிரம் கோடி அளவுக்கு மதுகளை விற்க பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

யார் காரணம் என மக்கள் அறிவார்கள்: திமுகவின் சாராய சாம்ராஜ்ஜியத்தை ஒழித்து கட்டுவதாக கூறி ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது தான் டாஸ்மாக். அவர்கள் ஆட்சியில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. இன்று இந்த டாஸ்மாக் ஒரு அவமான சின்னமாக மாறி போய் விட்டது. அதிகாலையிலே திறந்து கள்ள சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடக்கிறது. யாரை பார்த்தாலும் இன்று குடி காரர்களாக தெரிகிறார்கள். ஒரு காலத்தில் படிக்கும் சமூகம் என்று பெயர் வாங்கிய தமிழ் சமூகம் இன்று குடிக்கும் சமூகமாக மாறி போக காரணம் யார் என்று மக்களுக்கு தெரியும்" என ஆதங்கத்துடன் கொட்டித் தீர்த்தார் திருச்செல்வன்.

இதையும் படிங்க: தமிழறிஞர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.