ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am
author img

By

Published : May 30, 2020, 6:51 AM IST

ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளருடன் தொலைபேசியில் உரையாடல்!

டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் மார்க் தாமஸ் எஸ்பருடன் தொலைபேசியில் உரையாடினார்.

பொருளாதார முறைகேடு குறித்து ப. சிதம்பரம் ட்வீட்

டெல்லி: இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் சரியத் தொடங்கி உள்ளது என முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து ஆலோசனை

டெல்லி: லடாக்கில் சீனாவால் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கான மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டது.

'ஜி.எஸ்.டியை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை!'

டெல்லி: இந்த நிதி ஆண்டில் ஜி.எஸ்.டியை உயர்த்தும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் தளர்வுகளை ஏற்படுத்தக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: மாவட்ட ஆட்சியர்கள், தங்களின் மாவட்டங்களுக்குள் எந்தத் தளர்வுகளையும் ஏற்படுத்தக் கூடாது என்றும், தேவை இருப்பின் தலைமை செயலாளரிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புழல் சிறையில் 30 கைதிகளுக்கு கரோனா தொற்று!

திருவள்ளூர்: புழல் சிறையில் 94 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தண்டனை சிறையில் உள்ள 30 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

சென்னை: வெட்டுக்கிளிகளை மருந்து தெளித்து அழிப்பதற்கு பதிலாக அவற்றை தீவனமாக மாற்றலாம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேராசிரியர் சுல்தான் இஸ்மெயில் கருத்து தெரிவித்துள்ளார்.

'நான் செய்யும் சேவை என் குழந்தைகளை காப்பாற்றும்'

நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அது குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் சேவாக்!

கரோனா வைரஸால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், தனது வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.