ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am

author img

By

Published : May 26, 2020, 6:47 AM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am

சூலூரில் களமிறங்கும் இந்திய விமான படை!

சென்னை: இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) மே 27ஆம் தேதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நான்காவது தலைமுறை எல்.சி.ஏ தேஜாஸ் விமானத்துடன் பொருந்திய 18ஆம் எண் படைப்பிரிவை (No.18 Squadraon) இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TTD (ட்டி.ட்டி.டி) நில விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது ஆந்திர அரசு.

திருமலை திருப்பதி கோயிலின் நில விற்பனை விவகாரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பக்தர்களின் உணர்வைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நில விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது ஆந்திர அரசு.

'குடிமக்களின் ஆரோக்கியம் மீதும் அரசுக்கு அக்கறை வேண்டும்': உச்ச நீதிமன்றம்

டெல்லி : விமான நிறுவனங்கள் மீது காட்டும் அக்கறையைக் குடிமக்களின் ஆரோக்கியம் மீதும் காட்ட வேண்டும் என மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவிட்-19 தாக்கம்: மும்பையில் காவல்துறையினர் உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

மும்பை: இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அந்நகரில் இதுவரை 12 காவல் துறையினர் கோவிட்-19க்கு பலியாகியுள்ளனர்.

100 வாட் பல்பிற்காக வாடகைக்கு குடியிருந்தவரைக் கொன்ற வீட்டு உரிமையாளர்!

டெல்லி: அதிகளவு 100 வாட் மின் விளக்கினை உபயோகித்ததாகக்கூறி, வீட்டில் வாடகைக்கு இருந்தவரை, வீட்டின் உரிமையாளர் கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடையாளம் தெரியாமல் மாறி போன 'கைட்டம்' மஞ்சுவாரியர்

நடிகை மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகி வரும் 'கைட்டம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

‘இந்திய அணிக்காக மீண்டும் டி20 போட்டிகளில் களமிறங்குவேன்’ - ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவும் தயாராகவுள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சேமிப்பு இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தைக் குறைத்த கோட்டக் மஹிந்திரா

இந்திய குடிமக்களின் கணக்குகளுக்கு மட்டும் சேமிப்பு இருப்புத் தொகை மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து கோட்டக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஆலோசனை கூறும் இந்தியர்

நியூயார்க்: கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சீர்செய்யும் ஆலோசனைக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்த்தா முகர்ஜி இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவில் சிக்கியுள்ள சீனர்களை மீட்கத் திட்டம்

பெய்ஜிங் : கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள சீன குடிமக்களை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.