ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm
author img

By

Published : May 22, 2020, 12:45 PM IST

இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் - ரிசர்வ் வங்கி

கரோனா காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில், வீடு, வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

ஆம்பன் புயலால் 19 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெஃப்

மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயலால் இதுவரை 19 மில்லியன் குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

விமான பயணச்சீட்டு முன்பதிவு 12.30 மணிக்குத் தொடக்கம்!

டெல்லி: ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவை வரும் 25ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ள நிலையில், இதற்கான முன்பதிவு இன்று பிற்பகல் 12.30 முதல் தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு - பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியையெட்டி பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்த உத்தரவு!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

க்ரிட்டி சனோனுக்கு 'குவராண்டைன் ஹேர்கட்' செய்த தங்கை

பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனுக்கு அவரது தங்கையும் பாடகியுமான நூபூர் சனோன் முடி வெட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

‘தோனி ஒருபோதும் அவரை ஹீரோவாக நினைத்தது இல்லை’ - பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: இளைஞர்கள் கைது!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

1000 கி.மீ நடந்து சொந்த ஊர் திரும்பிய கர்ப்பிணி!

பாரத்பூர்: 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் 10 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டு 600 மைல்களை (1000 கி.மீ) கடந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.