ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்திச் சுருக்கம்....

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : Jul 23, 2021, 3:21 PM IST

சுருக்கு வலையைத் தடை செய்க: கடலில் கறுப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரியில் சுருக்கு வலையைத் தடைசெய்ய வலியுறுத்தி படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

கார்கில் வெற்றி தினம்- ராணுவ வீரர்கள் பைக் பயணம்!

கார்கில் வெற்றி தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத் தளபதி (வடக்கு) உதம்பூர்- கார்கில் வரை 527 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

ஆடி வெள்ளியில் தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ. 36,048க்கு விற்பனையானது.

மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு வயதிற்குள்பட்ட 11 ஆயிரத்து 151 குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் முகாமை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று (ஜூலை 23) தொடங்கிவைத்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்புக் குழுவை திருத்தி ஆணை!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டு ஆணை வெளியாகியுள்ளது.

எம்.ஆர். விஜயபாஸ்கர் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய முடிவு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் புதிய மீன்வள மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசின் புதிய மீன் வள மசோதா நகலைக் கிழித்து, ஏஐடியுசி அமைப்பினர் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

குழந்தைகளுக்கான நியுமோகோக்கல் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

மும்பையில் நிலச்சரிவு: 36 பேர் உயிரிழப்பு!

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில், இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளுக்கு பலத்த மழை பெய்வது இடையூறாக உள்ளது.

மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: மூவர் மரணம், எழுவர் படுகாயம்

மும்பையிலுள்ள கோவண்டி பகுதியில் கனமழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் மும்பை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.