ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm
author img

By

Published : Jun 5, 2021, 5:32 PM IST

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

சென்னை: காயிதே மில்லத்தின் 126ஆவது பிறந்தநாளையொட்டி, காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தியும், மலர் தூவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

வரும் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடு தற்போதே மேற்கொள்ள வேண்டும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்

சென்னை: கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள், சுற்றுலா தலங்கள் உள்ள மாவட்டங்களுக்கு பயணிக்க பொதுமக்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி!

சென்னை: காசிமேட்டில் கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.

எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த கிருமி நாசினி வாகனம் தடுத்து நிறுத்தம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்த நிலையில், முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றி சென்றுள்ளனர்.

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

கரோனா இரண்டாவது அலையின் போது நடைபெறும் சம்பவங்கள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கண்டு பொறுப்புள்ள குடிமகன்களும் வேதனைப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மில்கா சிங்கின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"விளைவுகளை சந்திப்பீர்கள்" ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இந்திய அரசு

புதிய சமூக வலைதளக் கொள்கைகளை பின்பற்ற அதை கண்காணிக்க உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கரோனாவுக்கு சீனாவை குறை சொல்வது தவறு: ஊடகம் மூலம் அமெரிக்காவை சாடும் ரஷ்யா

கரோனா பாதிப்புக்கு சீனாவை குறை சொல்வது தவறு என ரஷ்ய ஊடகம் அமெரிக்காவை சாடியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.