ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am
author img

By

Published : May 16, 2021, 11:36 AM IST

'சுதந்திரத்துக்குப் பின் நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா' - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து!

சென்னை: சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவ அரசு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் டாக்டே புயல்!

தீவிர புயலாக இருந்த டாக்டே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18ஆம் தேதி மதியம் அல்லது மாலையில் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மனிதநேயம் மறந்த மருத்துவமனைகள்: அவசர ஊர்தியிலேயே உயிரிழந்த கர்ப்பிணி

கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் அலைகழிக்கப்பட்டதால், அப்பெண்மணி அவசர ஊர்தியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'மூதாட்டியை உயிருடன் கடித்து தின்ற தெரு நாய்கள்' பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரு: பசிக்கொடுமையில் சாலையில் படுத்திருந்த மூதாட்டியை, தெரு நாய்கள் கும்பலாகக் கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் 3 லட்சம் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!

கரூர்: மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 62.30 கோடி மதிப்பிலான கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

'பொது மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கரோனாவை ஒழிக்கலாம்' அமைச்சர் ராஜகண்ணப்பன்!

உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என, பொது மக்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்!

இந்தியாவின் தினசரி கோவிட் இறப்பு விகிதம் 4 ஆயிரத்துக்கு குறையவில்லை. இந்த அச்சமூட்டும் சூழ்நிலையில், 10 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ள 530 மாவட்டங்களில், 8 வார ஊரடங்கை அமல்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம்

பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவால் மூதாட்டி உயிரிழப்பு: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை ஆற்றில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.