ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - டாப் தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்தி
11 மணி செய்தி
author img

By

Published : Oct 23, 2020, 11:01 AM IST

1. டொனால்டு ட்ரம்ப் - ஜோ பிடன் இறுதிகட்ட விவாதம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி டென்னஸில் உள்ள நாஷ்வில்லே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

2. 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கல்!

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று(அக்.23) முதல் வழங்கப்படுகிறது.

3. ட்ரம்ப்பை கண்டிக்கும் துணிவு மோடிக்கு உள்ளதா?- ஜோதிமணி

இந்தியாவை அசுத்தமான நாடு என விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை கண்டிக்கும் துணிவு பிரதமர் மோடிக்கு உள்ளதா என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

4.கஞ்சா விற்பனையில் தொடர்பு - ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்!

சென்னை: கஞ்சா விற்பனை காரணமாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

5. பிகார் தேர்தலுக்கு ராகுல் காந்தி முக்கியத்துவம் அளிக்கவில்லையா?

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒரு வாரமே உள்ள நிலையில், ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்காமல் உள்ளார்.

6. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

7. ஆளுநரை சந்தித்த புதிய தேர்தல் ஆணையர்!

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

8. ஆன்லைன் மோசடி வழக்கு: நேரில் ஆஜராக பேஸ்புக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன்

ஜம்மு: ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பேஸ்புக்கின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர், பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் இயக்குநர், குவாட்ரண்ட் டெலிவென்ச்சர்ஸ் லிமிடெட் இயக்குநர், எஸ்பிஐ மேலாளர் ஆகியோருக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

9. விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்: தேவைப்பட்டால் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்படும்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் ரெட் கார்னர் நோட்டீசும் அனுப்பப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்

10. கொமரம் பீம்மின் குரலாக கர்ஜிக்கும் ராம் சரண்

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நேற்று (அக்.22) வெளியான ஜூனியர் என்டிஆரின் இண்ட்ரோ வீடியோவிற்கு ராம் சரண் குரல் கொடுத்து அசத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.