ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்தி
9 மணி செய்தி
author img

By

Published : Oct 21, 2020, 9:08 AM IST

1.இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு!

இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் கார்போரல் வாங் யா லாங்க், நேற்றிரவு (அக். 20) சீன மக்கள் விடுதலை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

2.மகாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்: நான்கு பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்ற பேருந்து, கொண்டைபரி காட் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழந்தததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

3. இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் கிடைக்கும்!

சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி - மூவர் மீது வழக்குப் பதிவு

கோவை: மத்திய மாநில அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 65 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது குற்றபிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5. பீகார் தேர்தல் களம்: பரப்புரையில் ஜே.பி.நட்டா!

டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பரப்புரை மேற்கொள்ள ஏதுவாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பீகார் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பேரணிகளில் உரையாற்றவுள்ளார்.

6. டெல்லியை பந்தாடியது பஞ்சாப்!

பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

7. பிரான்ஸ் அதிபர் தேர்தல்: ரஷ்ய உளவாளிகள் செய்த சதிவேலை அம்பலம்

வாஷிங்டன்: பிரான்ஸ் அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற ரஷ்ய உளவாளிகள் சதி வேலையில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

8. ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி: கோகுல்நாத் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி: ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

9. 'கடைக்கண்ணாலே'- ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள பாடல் இன்று வெளியீடு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள ’பூமி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கடைக்கண்ணாலே’ பாடல் இன்று வெளியாகிறது.

10. பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்

சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ராதே ஷ்யாம்' திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் இணைந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.