ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 pm
9 pm
author img

By

Published : Nov 17, 2020, 8:52 PM IST

1. பொறியியல் துணைக் கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை: பொறியியல் படிப்பில் சேர துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று(நவ.16) வெளியிடப்பட்டுள்ளது.

2. காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி

புதுக்கோட்டை: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

3. துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு சேர்க்கை!

சென்னை: துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

4. கரோனாவுக்கு எதிரான போர்: ஐநாவுடன் கைக்கோத்த 100 ஆராய்ச்சியாளர்கள்!

டெல்லி: கரோனா தடுப்பு மருந்து குறித்து பரவும் போலி செய்திகளைத் தடுக்க ஐநா எடுத்துள்ள புதிய முயற்சியில் 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கைக்கோத்துள்ளனர்.

5. குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்...!

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

6. நெய்வேலி செல்வமுருகன் மரண வழக்கு - புதிய வீடியோ வெளியிட்ட வேல்முருகன்!

சென்னை: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரண வழக்கு தொடர்பாக புதிய வீடியோ ஆதாரங்களை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டார்.

7. காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு நிதியுதவி அளித்த அமேசான் நிறுவனர்!

வாஷிங்டன்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 16 அமைப்புகளுக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஐந்தாயிரத்து 800 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

8. உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்!

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

9. செரீனாவின் வாழ்க்கையை பேசும் 'Being Serena'

தனது மகள் பிறப்பதற்கு முந்தைய காலத்தையும், மகப்பேறுக்கு பின் டென்னிஸிற்கு திரும்ப முடியுமா என்ற பயந்த நிமிடங்கள் பற்றி 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார்.

10. கடவுளுக்கு நன்றி; என் மூச்சு உனக்காக உள்ளவரை - மகள் குறித்து ஐஸ்வர்யா ராய்

என் வாழ்வின் முழுமையான காதல் நீ, என் தேவதை ஆராத்யா உனக்கு இனிய 9ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். உன்னை எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஆழமாக நேசிக்கிறேன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.