ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - Top 10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9PM
9PM
author img

By

Published : Jul 15, 2021, 9:05 PM IST

1. திமுகவின் தலையீடு அதிகமாக இருக்கிறது: ஓபிஎஸ்

அனைத்து மாட்டங்களிலும் திமுகவின் தலையீடு அதிகம் இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2. மேகதாது அணை விவகாரம்... டெல்லி புறப்பாடு ஏன்?

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என டெல்லி செல்லும் முன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறினார்.

3. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம்: அண்ணாமலை பேட்டி

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கிறதோ... அதற்கு தமிழ்நாடு பாஜக உறுதுனையாக நிற்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

4. அதிமுக ஆட்சியில் ரூ.9000 கோடி கடன் மோசடி வழக்கு; அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கக் கடனில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. திருவாரூரில் இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை

நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தின் இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6. கரோனா தொற்று நீங்க மயிலாடுதுறை ஆலயத்தில் சிறப்பு ஹோமம்

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கரோனா தொற்று நீங்க வேண்டி ஸ்ரீ மஹா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது.

7. 281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

பள்ளிக்கல்வித் துறையின் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர், நூலகர் உள்ளிட்ட 281 பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வழங்கினார்.

8. மிஸ் பண்ணாதீங்க: குஜராத்தில் பிரமாண்ட பூங்கா, அதிசயங்கள் நிறைந்த அரங்கம்...

குஜராத்தில் நீர் வாழ் உயிரினக் கூடம், ரோபோடிக்ஸ் அரங்கம், இயற்கைப் பூங்கா உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

9. 111 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு!

பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

10. 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த 'கனா காணும் காலங்கள்' குடும்பம்

'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவர்கள் மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.