ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 சுருக்கத்தை பார்க்கலாம்.

author img

By

Published : May 8, 2021, 9:49 AM IST

9am
9am

1.தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் வருகிற 10.ஆம் தேதி முதல் 24.ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2.ஸ்டாலின் பார்வை: உளவுத்துறை முதல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி வரை...

ஆட்சி மாற்றத்தை அடுத்து காவல் துறையில் உடனடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இன்னொரு பகுதியாக 3 முக்கிய ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

3.தொழிலாளியின் நேர்மையை பாராட்டி ஆட்டோ பரிசு வழங்கிய முதலாளி!

கோயம்புத்தூர்: அல்அமீன் காலனி பகுதியில் தன்னிடம் ஆட்டோ ஓட்டுநராக பணி புருந்தவரின் நேர்மையை பாராட்டி ஆட்டோவை பரிசாக வழங்கிய முதலாளியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

4.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய பொறுப்பாக கருதக்கூடிய உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்புக்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

5.காஞ்சிபுரத்தில் கரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் கரோனா தொற்றால் மூன்று பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

6. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி

சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் அதிமுகவில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

7.பெண்கள் மேம்பாடு : நகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்று (மே.07) தலைமைச் செயலகத்தில் அதிரடியாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார்.

8.ஆந்திர, தெலுங்கானாவிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - டெல்லி அரசு

ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் கட்டாயம் அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

9.ஒடிடி தளத்தில் வெளியாகும் நவம்பர் ஸ்டோரி

சென்னை: நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘நவம்பர் ஸ்டோரி' வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

10.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.