ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்தி
7 மணி செய்தி
author img

By

Published : Dec 4, 2020, 6:53 AM IST

1.வலுவிழந்தது புரெவி புயல்

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த 'புரெவி' புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2.ரயில்கள் சேவைகளில் மாற்றம்

சென்னை: புரெவி புயல் காரணமாக சில ரயில்களின் பயணங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மீண்டும் சில ரயில்களின் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

3.பிரேசிலுக்கு செல்லும் பிரிட்டன் கரோனா தடுப்பு மருந்து

பிரேசிலியா: ஆகஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியளர்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் 15 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

4. உடுமலை தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கோயம்புத்தூர்: உடுமலை தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஆய்வுசெய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

5. 'அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வென்று காட்டுவோம்!'

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காவது நினைவுநாளை (டிச. 05) முன்னிட்டு, தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழிச் சென்றால் நாளை நமதே என சபதமேற்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

6. உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு

தற்போது 70 விழுக்காடு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை நடைபெற்றுவரும் நிலையில் அதை 80 விழுக்காடாக உயர்த்தி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7. 75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு வலைவீச்சு!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே 75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

8. மகாபலேஷ்வரர் அருகே விறுவிறுபான படப்பிடிப்பில் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர்

மகாராஷ்டிராவிலுள்ள மகாபலேஷ்வரர் பகுதியின் அழகான பகுதியில் 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் விறுவிறுபான படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

9.ஐஎஸ்எல்: ஆட்டம் முடியும் நேரம்... கிருஷ்ணா அடித்த கோல்

பரபரப்பாக நடந்த ஐஎஸ்எல் லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி வீரர் ராய் கிருஷ்ணா பந்தை தலையால் முட்டி போஸ்டுக்குள் புகுந்து கோல் அடித்தது மூலம் தனது மூன்றாவது கோலை பதிவுசெய்தார்.

10. ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன!

மும்பை: பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசப்படவுள்ள 23 அம்ச நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.