ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am - ஈடிவி பாரத் 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

etv-bharat-top-10-news-at-7-am-today
etv-bharat-top-10-news-at-7-am-today
author img

By

Published : May 16, 2020, 7:05 AM IST

  • மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம்!

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  • 'தோல்வியடைந்தால் கவலை வேண்டாம்...' - வாய்ப்பளிக்கிறது சிபிஎஸ்இ!

தேர்வில் தோல்வியடையும் 9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

  • கோவிட்-19: அரசின் கரோனா செயல்பாடுகளை வரைபடத்தின் மூலம் ராகுல் நகையாடல்!

ட்விட்டரில் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தை வெளியிடுவதன் மூலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதி ஆயோக்கில் உள்ள "மேதைகள்" கணிப்பதுபோல் நாடு தழுவிய ஊரடங்கின் மூலமாக மே 16ஆம் தேதி முதல் புதிய கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்படமாட்டார்கள் என்று கேலி செய்துள்ளார்.

  • 'யார் தான் கடன் கொடுத்தது? முதலில் நீங்கள் பேசி முடிவெடுங்கள்' - ப.சிதம்பரம் கலாய்

டெல்லி: நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இரு வேறு அறிக்கைகள் வெளியிட்டதால், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.

  • மேற்கு வங்க ஆளுநரை கலாய்க்கும் திரிணாமுல் எம்.பி!

கொல்கத்தா : ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் முதலில் அரசியலமைப்பின் அடிப்படை வாசிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

  • கரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய இருதரப்பு தொடர்கள் உதவும் - பிசிசிஐ பொருளாளர்!

கரோனா வைரஸால் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க இரு தரப்பு தொடர்கள் உதவும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்!

ஒட்டாவா: கரோனா வைரஸ் தொற்றுநோயிக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்கள் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

  • 'கட்டுமான நிறுவனங்களுக்குச் சலுகை உண்டா' - ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு, வங்கிகள் பிற தொழில்களுக்கு அளித்த கடன் சலுகைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உண்டா என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களின் தலைமை அங்கமான கிரெடாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மதுக்கடைகளை திறப்பது கரோனா பரப்புவதற்கான திட்டம் - திருமாவளவன்

கடலூர்: வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர், மதுக்கடைகளை திறப்பது கரோனா பரப்புவதற்கான திட்டம் என விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

  • கரோனா அச்சம்; மருமகளால் ஒதுக்கப்பட்ட முன்னாள் அரசு அலுவலர் - காவல் ஆய்வாளரின் நெகிழ்ச்சிகர செயல்

மயிலாடுதுறை: கரோனா அச்சம் காரணமாக மருமகளால் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் அரசு அலுவலரை, சீர்காழி காவல் ஆய்வாளர் சதீஷ் தனது சொந்த முயற்சியால் குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.