1. சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு புது உத்தரவு வெளியிட்ட காவல் ஆணையர்
வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்குவிட்ட பின், அவர்களின் தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் - பெயர் மாற்ற அரசாணை வெளியீடு
இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
3. 'மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் திமுக அரசு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்' - கமல்
கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருந்துவிட்டது என்றும், தற்போதுள்ள திமுக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. 'அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்
கரோனா முழுமையாக குறையாத சூழ்நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் அரசு நிதானம் காட்ட வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத் விக் கேட்டுக்கொண்டுள்ளார்
5. ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினாலும் பணிக்கு வரலாம் - அமைச்சர் தகவல்
பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலே பணிக்கு வரலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
6. பாகுபலி படத்துல வேம்புலி நடிச்சிருக்காரா... ரசிகர்கள் உற்சாகம்!
வேம்புலி கதாபாத்திர புகழ் நடிகர் ஜான் கோக்கன், தான் பாகுபலி படத்தில் காளகேயராகத் தோன்றிய புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
7. பாரா ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் - தலைவர்கள் வாழ்த்து!
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8. 'அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும்' : ஓபிஎஸ் - ஈபிஎஸ் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
9. விஷாலின் பிறந்தநாள் ட்ரீட்
நடிகர் விஷால் நடித்துவரும் 31ஆவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
10. சொகுசு கார் மோதி காவலர் உயிரிழப்பு: ஷாக்கிங் சிசிடிவி
சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலர், சொகுசு கார் மோதி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.