ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jul 17, 2021, 7:11 AM IST

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
  1. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும் - மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும் என காணொலிக் காட்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

2. நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சௌந்தரராஜன்

ஒரு மருத்துவர் என்ற முறையில் நீட் தேர்வு அவசியம் தேவை என மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பூதியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

3. 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள் - மா. சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் 70 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளை உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

4. நம்ம விருகம்பாக்கம் செயலி வெளியீடு!

விருகம்பாக்கம் தொகுதி மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்கும் விதத்தில், ’நம்ம விருகம்பாக்கம்’ என்ற செயலியை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

5. திருப்பத்தூரில் விரைவில் அரசு தொழிற்சாலை - கதிர் ஆனந்த்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு தொழிற்சாலை கொண்டுவர அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக மல்லகுண்ட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிப்காட் தொழிற்சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் கதிர் ஆனந்த் எம்பி தெரிவித்தார்.

6. சென்னையில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியதால் பல்வேறு முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

7. ஆபாசக் காணொலிகளை வெளியிடபோவதாக மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க புகார்

ரூ.10 லட்சம் பணம் தரவில்லையானால், மனைவியின் ஆபாசக் காணொலிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுக்கும் காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

8. காவல் சீருடையில் கொள்ளையடித்த 9 பேர் கைது; ரூ.32 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு காவல் சீருடையை அணிந்து தொழிலதிபரிடம் கொள்ளையடித்த 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.32 லட்சம் பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

9. மீண்டும் தொடங்கியது ‘பொன்னியன் செல்வன்’

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியன் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

10. டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா... ரசிகர்கள் உற்சாகம்!

டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.