மேஷம்: இன்று நீங்கள், அமானுஷ்யமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை வாங்க படித்து அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதில் உள்ளவற்றை பற்றி விரிவாக பேசுவீர்கள். இந்த அறிவை, நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
ரிஷபம்: இன்று, உங்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்துவந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனை கருத்தில் கொண்டு, அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. அமைதியாக செயல்படவும். உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும்.
மிதுனம்: இன்றைய தினத்தில் நீங்கள் தொழிலைவிட, உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நிறமாக இருக்கும். உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்: இன்றைய தினத்தில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுக்கள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்து, இன்றைய தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், நீங்கள் உங்கள், வழக்கமான அமைதியான நிலைக்கு திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.
சிம்மம்: இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றி கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
கன்னி: கூட்டாளித்துவ திட்டத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரை விட சிறப்பாக செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மக்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது நீக்குப் போக்காக அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்: இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக சிரிக்காமல், மான் பூர்வமாக சிந்திப்பீர்கள் உணர்ச்சிகளை இன்று கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்யவும் கூடாது. ஆனால் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொது மக்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு.
தனுசு: இன்று உங்கள் மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.
மகரம்: உங்களது, வெளிப்படையான மற்றும் நேரடியான அறம் அணுகுமுறையின் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனதை நீங்கள் புண்படுத்தக் கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும் மனக்காயங்களை போக்கவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் உறவுகளை சீர் செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்: இன்று நீங்கள் காதல்வயப்பட கூடும்! திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தை செலவிடுவார்கள். பழைய புகைப் படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம்: ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள், கடுமையாக தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதையும் படிங்க: தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல், மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது