ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்பு!#EtvBharatNewsToday - important news

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

Etv Bharat NewsToday
Etv Bharat NewsToday
author img

By

Published : Sep 4, 2020, 6:05 AM IST

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை:

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. கரோனா தடுப்புப் பணி, தளர்வுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தலைமைச் செயலர் ஆலோசனை
தலைமைச் செயலர் ஆலோசனை

ஐபிஎல் 2020 - முழு அட்டவணை வெளியீடு:

ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முழு அட்டவணை இன்று (செப்டம்பர் 4) வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முழு அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி இன்று முதல் தொடங்கும் என தெரிகிறது.

ஐபிஎல் 2020 - முழு அட்டவணை வெளியீடு
ஐபிஎல் 2020 - முழு அட்டவணை வெளியீடு

நீட் தேர்வு - சீராய்வு மனு இன்று விசாரணை:

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

நீட் தேர்வு - சீராய்வு மனு இன்று விசாரணை

ஜிஎஸ்டி இழப்பீடு - பொருளாதாரஆலோசனைக் குழு கூட்டம்:

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடை வழங்க காலதாமதம் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என்கே சிங், பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீடு

ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் மோடி கலந்துரையாடல்:

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள திக்ஷந்த் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளார்.

ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுடன் மோடி கலந்துரையாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.