ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். #EtvBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள்
இன்றைய நிகழ்வுகள்
author img

By

Published : Sep 24, 2020, 7:52 AM IST

Updated : Sep 24, 2020, 8:06 AM IST

உரிமை மீறல் நோட்டீஸ்: திமுக எம்எல்ஏக்கள் தொடா்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிராக, திமுகவினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குட்காவை பேரவைக்குள் எடுத்துச்சென்றதால் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் 15 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் முன்னதாக விரிவாக ஆலோசனை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக இந்த 15 பல்கலைக்கழகங்கள் சார்பில் தலா 20 முதல் 25 பேர் புதிய கல்விக் கொள்கை குறித்துத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும், பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரும் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்து கேட்புக் கூட்டம் இன்று காலை 9.30 முதல் 4 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பூசி - அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ள இண்ட்ராநாசல் வேக்சின் எனப்படும் மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசியை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உருவாக்கி உள்ளது.

மனிதர்களுக்கு இன்னும் செலுத்தி இத்தடுப்பூசி பரிசோதிக்கப்படாத நிலையில், இந்தியாவில் உரிய ஒப்புதல் பெற்ற பின் அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில், ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் இக்கல்லூரியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்

வானிலை
வானிலை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3.5 மீட்டம் உயரம் வரை எழக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ஐபிஎல் போட்டி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூரு ராயல் சேலஞ்ர்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பெங்களூரு ராயல் சேலஞ்ர்ஸ் அணிகளுக்கு இடையேயான 6ஆவது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் வென்ற பஞ்சாப் அணி, வெற்றியைத் தக்கவைக்கிறதா, அல்லது மற்றொரு புறம் சூப்பர் ஓவர் வரை போராடித் தோற்ற பஞ்சாப் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்கிறதா என்பதை இரவு 7.30 மணிக்கு காணலாம்.

Last Updated : Sep 24, 2020, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.