டெல்லி செல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் பேச தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மே.27) டெல்லி செல்லவுள்ளார்.
![தங்கம் தென்னரசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11912031_a.jpg)
மேகதாது அணை பிரச்னை குறித்து கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை
மேகதாது அணை பிரச்னை குறித்து இன்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
![கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11912031_b.jpg)
நேரு நினைவு தினம்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
![நேரு நினைவு தினம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11912031_c.jpg)
மூன்று மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மழைக்கு வாய்ப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11912031_d.jpg)