திருவாரூர் தேரோட்டம்
சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.
நடிகர் கார்த்திக் பரப்புரை
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவான தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தபால் வாக்குகள் வழங்கும் பணி தொடக்கம்
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கவுள்ளது.
ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் தொடக்கம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் இன்று தொடங்குகிறது.