மோடி தமிழ்நாடு வருகை
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையார் கப்பற்படை தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து தரைவழி மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
ராணுவத்திற்கு அர்ப்பணிப்பு
இன்று சென்னை வரும் மோடி இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 118 அர்ஜூன் மார்க் 1A டாங்கிகளை ராணுவத்திற்கு அர்ப்பணிக்கிறார்.
கட்டணமில்லா பயணம்
சென்னை வண்ணாரப் பேட்டை - விம்கோ நகர் இடையே முதற்கட்ட விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும்தான் பொருந்தும்.
கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
#IND vs ENG 2ஆம் நாள்
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 300 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்த நிலையில், இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.