1. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரியர் தேர்வு
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு அரியர் மணவர்களுக்கான தேர்வுகள் இன்றுமுதல் தொடங்கி மார்ச் 1ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
2.துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 17 துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் தொடங்குகிறது. நாளை (பிப். 10) முதல் இணைய வழியே பொதுக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
3.மின்விநியோகம் நிறுத்தம்
சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக புழல், செம்பியம், தாம்பரம் கடப்பேரி உள்ளிட்ட பகுதிகள் மின் விநியோகம் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நிறுத்தப்படுகிறது.
4. அமெரிக்கா செல்லும் தனுஷ்
'தி க்ரே மேன்' படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷ் இன்று அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு மே மாதம் மீண்டும் தமிழ்நாடு திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 39 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.