சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு:
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இயக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவையை, பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் இரவு 9 மணி வரை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
![சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8745208_4.jpeg)
சாம்சங் கேலக்ஸி எம்51 அறிமுகம்:
புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 இன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு:
இன்று முதல் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
![ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8745208_3.jpg)
இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளித்த உறுதி:
1980ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அகா சகி, இந்தியாவில் மத வன்முறையை தூண்டும் வகையில் பாகிஸ்தான் செயல்படாது என உறுதி அளித்திருந்தார்.
கேரளா, கர்நாடகாவில் கனமழை:
கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், அம்மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
![கேரளா, கர்நாடகாவில் கனமழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8745208_8.jpg)
கரீபியன் பிரிமியர் லீக் இறுதிப் போட்டி:
கரீபியன் பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
![கரீபியன் பிரிமியர் லீக் இறுதிப் போட்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8745208_5.jpg)
சீனா - ஆசிரியர் தினம்:
ஆசிரியர்களை மாணவர்கள் போற்றும் விதமாக இன்று சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.