மருத்துவர்களுடன் உரையாடும் மோடி
தேசிய மருத்துவர்கள் தினமான இன்று இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மருத்துவர்களுடன் கலந்துரையாடுகிறார்
புதிய ரேஷன் கார்டு
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதே போல் ரேஷன் கடைகளில் இன்று முதல் கைரேகை பதிவும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால ரயில்கள் இயக்கம்
கரோனா பரவல் காரணமாக சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை
பருவத் தேர்வு, நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 13 பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.