பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி
நியூ பாபூர் - நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை (இடிஎப்சி) பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
![Etv Bharat News today - Dec 29](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10040750_modi.jpg)
தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் பார்கள் திறக்க அனுமதி
தமிழ்நாட்டில் இன்றுமுதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பார்களில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
![Etv Bharat News today - Dec 29](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10040750_bar.jpg)
’வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரையை இன்று நாமக்கல்லிலிருந்து தொடங்குகிறார்.
![Etv Bharat News today - Dec 29](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10040750_cm.jpg)
தஞ்சையில் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை
தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.
![Etv Bharat News today - Dec 29](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10040750_kamal.jpg)