ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv-bharat-1-pm-news
etv-bharat-1-pm-news
author img

By

Published : Oct 14, 2020, 12:59 PM IST

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் 16ஆம் தேதி வெளியீடு!

கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தேசிய மருத்துவ தகுதி தேர்வான நீட் நுழைவுத் தேர்வை எழுத தவறிய மாணவர்களுக்கு இன்று (அக்.14) மறுதேர்வு நடக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் அக்.16ஆம் தேதி வெளியாகின்றன.

டெல்லிக்கு தண்ணீர் காட்டுமா ராஜஸ்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது இடம் வகிக்கும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஃபேஸ்புக் காதல் திருமணம்: உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்தப் பெற்றோர்

தருமபுரி: ஃபேஸ்புக் காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் உடலை வாங்க மறுத்துப் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டை எழுதித் தரக் கேட்டு மனைவி குடும்பத்தார் மிரட்டல்: மின்வேலை செய்பவர் தற்கொலை

கன்னியாகுமரி: மனைவி குடும்பத்தார் வீட்டை எழுதித் தரக் கேட்டு மிரட்டியதால் கடிதம் எழுதி வைத்து விட்டு மின்வேலை செய்யும் நபர் தற்கொலை செய்துகொண்டார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?

பிகாரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு நிறைவு குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை (அக்.10) மாலை சந்தித்து ஆலோசிக்கின்றனர்.

“சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கும்”- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!

நாகப்பட்டினம் மாவட்டம், சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடல் அரிப்புத் தடுப்புப் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இறந்ததாக கூறி உயிரோடிருந்த முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்!

சேலம்: உயிரோடு இருந்த முதியவரை, இறந்ததாக கூறி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த குடும்பத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு வைத்திருந்த கட்டடத்திற்கு சீல்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரத்தில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள பட்டாசு, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி பண்டல்கள் வைத்திருந்த கட்டடத்திற்கு தனி வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

எம்.எல்.ஏ. உள்பட 15 முக்கிய பிரமுகர்கள் நிதிஷ் குமார் கட்சியிலிருந்து விலகல்!

சட்டப்பேரவை தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், ஆளும் நிதிஷ் குமார் கட்சியிலிருந்து தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் உள்பட 15 முக்கிய பிரமுகர்கள் விலகியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.