1.இந்தியா - சீன மோதல்: ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு
இந்திய சீன நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ராணுவ ரீதியான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டிராக்டர் பேரணி சென்ற ராகுல் காந்தி...!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தில் 50 கி.மீ. தூரத்திற்கு டிராக்டர் பேரணி சென்றார். அப்போது அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் இருந்தார். இந்த பேரணியின் போது வழி நெடுகிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், விவசாயிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3.மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியையாக அவதாரம் எடுத்த மாணவி!
மலைக்கிராமத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில், தனது வீட்டையே வகுப்பறையாக மாற்றி, அப்பகுதி குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறார், எட்டாம் வகுப்பு மாணவி. சிறுவயதிலேயே சக ஊர் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியையாக உருவெடுத்திருக்கும் மாணவி அனாமிகா குறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு.
4.ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு: திமுக மகளிர் அணி பேரணி
உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நாளை சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி செயலாளர் எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி நடத்த உள்ளது.
5.ரயில் டிக்கெட்டிற்கு இந்தியில் குறுஞ்செய்தி - தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
6. தாத்தா-பாட்டி வெட்டிங் போட்டோஷூட் : அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய பேரன்!
அரை நூற்றாண்டுக்கும் மேலாக திருமணப் புகைப்படம் எடுத்துக் கொள்ளாத தனது தாத்தா- பாட்டிக்கு, பேரன் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7.நாட்டை வலுப்படுத்த கரோனாவிலிருந்து விரைந்து மீள்வேன் - ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சூழலில், பல தரப்பிலிருந்தும் வதந்திகள் கிளம்பிய நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நாட்டை வலுப்படுத்த விரைவில் குணமடைந்து வருவேன்’ என காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8.போதை பொருள் விவகாரத்தில் மொத்த பாலிவுட்டையும் குற்றம்சாட்ட வேண்டாம் - அக்ஷய் குமார்
போதை பொருள் பாலிவுட்டில் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் அனைவருக்கும் தொடர்பு இருக்கும் என குற்றம்சாட்ட வேண்டாம் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
9.ஐபிஎல் 2020: யுஏஇ வந்தடைந்த பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைந்தார்.
10.பிரஞ்சு ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் வெற்றி!
பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.