ETV Bharat / state

அரசாணை வெளியிட்ட மறுநாளே செயல்படுத்திய முதலமைச்சர்...! என்ன தெரியுமா.?

ஈரோட்டில் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை" பெயர் பலகையை இன்று(அக்.04) சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

தியாகி குமரன் சாலை
தியாகி குமரன் சாலை
author img

By

Published : Oct 4, 2021, 6:31 PM IST

ஈரோடு: ஈரோட்டில் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை" எனப் பெயர் சூட்டல் நிகழ்வை இன்று (அக்.04) சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்துவைத்தார்.

தியாகி குமரனின் சிறப்பு:

தன் இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காக தேசிய கொடியை கைகளில் தாங்கி பிடித்தப்படியே தன் உயிரை நீத்த திருப்பூர் குமரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பிறந்தார்.

தியாகி குமரனின் 118ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு, தியாகி குமரன் சாலை எனப் பெயர் சூட்டி நேற்று(அக்.3) அரசாணை வெளியிடப்பட்டது.

தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டல் நிகழ்வு

இந்த நிலையில், குமரனின் 118ஆவது பிறந்த நாளான இன்று (அக்.4) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு, தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக பெயர் பலகையை திறந்துவைத்தார்.

திருப்பூர் குமரன் நினைவகம்:

சுதந்திர போராட்டத்தில் தேசிய கொடியினை கையில் ஏந்தியபடி உயிர் நீத்த திருப்பூர் குமரனின் மரணம் சுதந்திர வேட்கையை தூண்டியது. தியாகி குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில், 'திருப்பூர் குமரன் நினைவகம்' ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

குமரனின் 100-ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலையை இந்திய அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. திருப்பூர் குமரன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட கடந்த 2015 இல் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அந்த வகையில் அவர் பிறந்த மாவட்டமான ஈரோட்டில் உள்ள பிரதான சாலைக்கு குமரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குலசை தசரா: கடற்கரையில் நடத்தலாமா என்பது குறித்து கலெக்டர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.