சென்னை: இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதலமைசச்ர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுவதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்.
ஆனால், ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பிரசாரம் செய்ய மாட்டமோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், "இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவதில் இருந்து வாபஸ் பெறுவார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம்.
எம்ஜிஆர் வெற்றி கண்ட இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடாகும். அதில் ஓ. பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக முழுமையாக பாடுபடுவோம். ஆனால், தென்னரசுக்கு பிரசாரம் செய்ய மாட்டமோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் சூரியன் மலரும் - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை