ETV Bharat / state

'ஈபிஎஸ் தன்னைத்தானே அழித்துக்கொள்வார்' - ஓபிஎஸ் அணியில் மீண்டும் இணைந்த மைத்ரேயன் ஆவேசப்பேச்சு - EPS Vs OPS

'எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானே அழித்துக்கொள்வார்' என ஓ.பன்னீர்செல்வம் அணியில் மீண்டும் இணைந்த மைத்ரேயன் கூறியுள்ளார்.

‘ஈபிஎஸ் தன்னை தானே அழித்து கொள்வார்’ - ஓபிஎஸ் அணியில் மீண்டும் இணைந்த மைத்ரேயன் ஆவேச பேச்சு

author img

By

Published : Oct 9, 2022, 9:27 AM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இரு அணிகளாகப் பிரிந்தபோது, முதலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் இணையும் விழாவில், மீண்டும் மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துள்ளார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய மைத்ரேயன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான். அதிமுகவை ஒருங்கிணைத்து செல்லும் திறமை ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அழித்துவிட்டு, கடைசியில் தன்னைத் தானே அழித்துக் கொள்வார். 'யானைக்கும் அடி சறுக்கும்', அது போன்றுதான் அங்கே சென்றுவிட்டேன்" எனக் கூறினார்.

மைத்ரேயன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போதே கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்தார். முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்த மைத்ரேயன், பாஜகவின் பொதுச்செயலாளராக 1995ஆம் ஆண்டு முதல் 1997 வரை பொறுப்பில் இருந்தார். பின்னர் பாஜக மாநில துணைத்தலைவராக 1999 வரையிலும், கட்சியின் தலைவராக 2000ஆண்டு வரையிலும் பொறுப்பிலிருந்தார்.

இதன் பின்னர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து 2002ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இப்போது நடப்பதும் தர்மயுத்தம்தான் - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.