ETV Bharat / state

பிக் பாக்கெட் அடிப்பது போல பதவியை அடிக்க முயற்சி செய்கிறார் ஈபிஎஸ் - ஓபிஎஸ் விமர்சனம்

அதிமுகவின் சட்ட விதிகளை பின்பற்றாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல ஈபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியை பெற உட்கட்சி தேர்தலை நடத்துவதாக ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

EPS trying to reach the post like pickpocketing OPS has criticized
பிக்பாக்கெட் அடிப்பது போல் பதவியை அடைய ஈபிஎஸ் முயற்சி செய்கிறார் என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்
author img

By

Published : Mar 18, 2023, 3:17 PM IST

பிக்பாக்கெட் அடிப்பது போல் பதவியை அடைய ஈபிஎஸ் முயற்சி செய்கிறார் என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய ஈபிஎஸ்ஸை போட்டியின்றி தேர்வு செய்ய அவரது அணியினர் திட்டமிட்டு உள்ளனர். வரும் மார்ச் 27ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி அதை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உள்ளனர். இந்த நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "பொதுச்செயலாளர் தேர்தலை சட்ட ரீதியாக சந்திப்போம். எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்திப்பது சிறுபிள்ளை தனமானது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியின் சட்ட விதிகளை மாற்றி பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்து மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தி உள்ளனர்.

ஈரோடு இடைத் தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தை கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காப்பாற்றிய இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு இயக்கத்தை சீர்குலைத்துள்ளார். இனியும் இவர்கள் திருந்துவார்கள் என்றோ அல்லது இணைவார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள். எடப்பாடி பழனிசாமியிடம் அதிகமான தொண்டர்கள் இல்லை. அதிகமான குண்டர்கள் தான் இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கழகத்தின் சட்ட விதிகளை பின்பற்றாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல பொது செயலாளர் தேர்தலை நடத்துகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாபெரும் இயக்கத்தை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் எடப்பாடி பழனிசாமி. பணம் வைத்திருப்போர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நிலையை உருவாக்கியதற்கு எதிர்த்துதான் நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம்.

அதிமுகவை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுவோம். எடப்பாடி பழனிசாமியின் நாசகார, சதிகார செயலை நாட்டு மக்களிடம் அம்பலபடுத்துவோம். தமிழகம் முழுவதும் மதுரை விமானநிலையத்தில் நடந்தது போல ஈபிஎஸ்க்கு எதிராக அனைவரும் திரும்புவார்கள். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளோம். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மக்கள் நினைக்கின்றனர். சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைவது குறித்து இரண்டு தரப்பும் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.