சென்னை: அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், மத்திய பாஜக அரசின் அரசியலையும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதிலும், நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவிற்கு, வீடியோ மூலமாகவே ஈபிஎஸ் பதில் அளிப்பதாக ட்விட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தங்கை, கனிமொழி 2 ஜி வழக்கில் கைதான போது கூட நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், தற்போது செந்தில் பாலாஜி கைதுக்காக அவர் பதறுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை pic.twitter.com/TeiRh9a9aD
— AIADMK (@AIADMKOfficial) June 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை pic.twitter.com/TeiRh9a9aD
— AIADMK (@AIADMKOfficial) June 16, 2023நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை pic.twitter.com/TeiRh9a9aD
— AIADMK (@AIADMKOfficial) June 16, 2023
அதிமுகவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பண மோசடி செய்த புகார் உள்ளிட்ட அளவுக்கு அதிகமான சொத்துகள் சேர்த்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையின் ரெய்டுக்கு முதல் முக்கியமான காரணங்களாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை, கரூர், சென்னை உள்ளிட்ட இவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் இவருடன் நெருக்கமாக உள்ள நண்பர்கள், உறவினர்கள் என பல பகுதிகளில் பல கட்டங்களாக அமலாக்கத்துறை பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கில் வராத பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாடு தலைமைச் செயலத்தில் உள்ள துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட அறையிலும் அமலாக்கத்துறை அதிரடியாக நுழைந்து 18 மணி நேரமாக நடந்த சோதனையின் இறுதியில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, அவரது இலாகவை யாருக்கு மாற்றி அளிப்பது என்று பரிந்துரைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் சந்தித்ததை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் தனது அதிகாரத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் - வைகோ விளாசல்
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட வீடியோவில், 'நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை ஊழல் செய்த வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக பற்றியும் தன்னைப் பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து முழு உண்மையை கூறவேண்டியது எனது கடமை என்றார்.
மேலும் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியினுடைய வழக்கு நடந்து வந்ததாகவும், அதில் உச்சநீதிமன்றம் 2 மாதத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்து என்றார்.
அதோடு, 2 மாதத்திற்கு இது குறித்த விசாரணையை முடிக்காவிடில் நீதிமன்றத்தில் தரப்பில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து இந்த வழக்கை முடித்து வைக்கும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தான் இந்தகைய ரெய்டுகள் நடந்ததாகவும், அவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்று கூறிய செந்தில் பாலாஜியும் கூறியிருந்தார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஏற்கனவே, இந்த வழக்கு குறித்து சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகத நிலையில் தான் விசாரணையை முடிக்க இந்த ரெய்டு நடந்ததாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்யப்படவே, அவருக்கு உடல்நிலை சரியில்லாதது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறினார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வெளியானதாகவும் அதில், அவர் மிகவும் பதற்றத்துடன் பேசியதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடினார். அத்தோடு இந்த பதற்றத்துக்கு என்ன காரணம்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இவ்வாறு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த செய்தியை அமலாக்கத்துறைக்கு சொல்லி விடுவார் என்ற அச்சத்தால் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஓடிப்போய் மு.க.ஸ்டாலின் பார்த்ததாக தெரிவித்தார். இதனிடையே, அமைச்சர்களும் போய் பார்க்கின்றனர். காரணம், முதலமைச்சரின் குடும்பத்துக்கு தான் பணம் அளித்த விவகாரத்தை எங்கு அவர் சொல்லி விடுவாரோ என்றுதான் பதறிப்போய் அங்கே பார்த்ததாகவும் கூறிய அவர், இது குறித்து செந்தில் பாலாஜி ஏதேனும் சொல்லி விட்டால், தனது குடும்பமும் பாதிக்கும், தனது அரசியல் வாழ்க்கையும் சூனியமாகிவிடும் என்றும் ஆட்சியே களைந்து விடும் என்றும் பயந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஆகவே தான், இவ்வாறு பதறிப்போய் பேட்டியளித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதற்கு முன்பு, திமுக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியபோது எல்லாம் மு.க.ஸ்டாலின் ஒன்றும் பேசாமல் இருந்ததாக கூறினார். அதேபோல, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, கனிமொழியும், ஆ.ராசாவும் 2ஜி ஸ்பெட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டனர். அப்போது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் இருந்தபோது, இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது மு.க.ஸ்டாலின் அவரது சகோதரி கனிமொழியைக் கூட நேரில் சென்று சந்திக்கவில்லை என்றும் ஆனால், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை செய்தவுடன் மு.க.ஸ்டாலினுக்கு இவ்வளவு பதற்றம் எதற்காக? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மடியிலேயே கனம் இருக்கிறது; வழியிலே பயம் இருக்கிறது' என்று அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: "முதலமைச்சரே சிறைக்கு செல்வார்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!