ETV Bharat / state

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்" - எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம்...

EPS Kodanad murder and robbery case: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

eps-reason-for-not-appearing-in-the-court-is-not-acceptable-mhc
சட்டத்தின் முன் அனைவரும் சமம் - எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம்...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 3:12 PM IST

Updated : Dec 8, 2023, 3:34 PM IST

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக தற்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மேல்முறையீட்டு மனு குறித்து டிசம்பர் 8ஆம் தேதிக்குள் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதன் அடிப்படையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோருகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், உடல் நிலை காரணத்தைத் தவிர மற்ற காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை எனத் தெரிவித்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் கூறினர். இதனையடுத்து, இது குறித்து விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. மீண்டும் தலை தூக்குகிறதா அரிவாள் கலாச்சாரம் - பொதுமக்கள் அச்சம்!

Last Updated : Dec 8, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.