ETV Bharat / state

‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..! - பேச்சுவார்த்தை

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான ஒரு தொகுப்பை காணலாம்.

தலைவன் ஒருவன் தான் என்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்...சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

author img

By

Published : Sep 7, 2022, 9:17 AM IST

சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. இதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஈபிஎஸ் தரப்பில் ஜூன் 23 மற்றும் ஜூலை 11ஆம் தேதிகளில் பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு செல்லாது என நீதிமன்றங்களை நாடிய ஓபிஎஸ்க்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் - ஈபிஎஸ், இரு தரப்பினருக்கும் மாறி மாறி தீர்ப்பு வந்துள்ளது.

இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் ஈபிஎஸ்க்கு ஆதரவாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்பை கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு வழக்கு ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க மறுபுறம் சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈபிஎஸ் தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர்.

தலைவன் ஒருவன் தான் என்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்...சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!
தலைவன் ஒருவன் தான் என்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்...சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்தது. அப்போது அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். சசிகலாவையும், டிடிவி தினகரனையும் நேரடியாக சந்தித்து அழைப்பு விடுப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஈபிஎஸ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார். ஆனால் சசிகலா எந்த ஒரு பதிலையும் கூறாமல் அமைதியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் ஈபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு சில மூத்த நிர்வாகிகள் சசிகலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். சசிகலாவின் பார்வையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே துரோகம் செய்தவர்களாக தான் என்று பார்க்கப்படும். இருந்தாலும் ஈபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய நியாயத்தை எடுத்த கூற முயற்சி செய்கின்றனர். நமது தரப்பிற்கு சசிகலா வந்தால் மீண்டும் நமது இயக்கம் வலிமையோடு செயல்படும் என ஈபிஎஸ் தரப்பினர் நினைக்கின்றனர்.

இதில் ஈபிஎஸ் தரப்பில் சசிகலாவை சந்தித்து, ஒரு சில விவகாரங்களை விவாதிக்க இருக்கிறார்கலாம். அதில், "2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தர்மயுத்தம் என்ற பெயரில் கட்சியை பிளவு பாதைக்கு அழைத்து சென்று, உங்களை ஜெயிலுக்கு அனுப்பியதே ஓபிஎஸ் தான். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிவிட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் கொலை பலியை சுமத்தியவர் ஓபிஎஸ்.

நீங்கள் அமைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க திமுகவோடு இணைந்து வாக்கு செலுத்தியவர் ஓபிஎஸ். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்க வேண்டாம் என கூறினோம். வலுக்கட்டாயமாக ஆணையத்தை அமைக்க சொன்ன ஓபிஎஸ், 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. தற்போது ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையில், உங்களை மீண்டும் விசாரணை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

அன்று ஓபிஎஸ் செய்த தவறினால் இன்றும் நீங்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இவ்வளவு துரோகம் செய்த ஓபிஎஸ்சுடன் எப்படி கைகோர்க்க மனம் வருகிறது. ஈபிஎஸ்சும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் நினைத்து பாருங்கள், நீங்கள் ஈபிஎஸ்சிடம் ஆட்சியை கொடுக்கும் போது, 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. ஓபிஎஸ் 11 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க வாக்கு செலுத்தினார்.

ஒருபுறம் திமுக அரசு எப்படியாவது ஆட்சியை கலைக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தது. மறுபுறம் டிடிவி தினகரன் 30 நாளில் ஆட்சி கவிழும் என்று கூறிகொண்டு இருந்தார். இன்னொரு புறம் உட்கட்சியையும் சமாளிக்க வேண்டும் மற்றும் ஆட்சியையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த நேரத்தில் உங்களை ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.

அவர்களை ஈபிஎஸ்சும் எதிர்த்திருந்தால் உங்கள் நிலைமை தான் அவருக்கும் ஏற்பட்டிருந்திருக்கும். அதனால் தான் அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவின் அரசை எப்படியாவது முழுமை அடைய செய்ய வேண்டும் என ஈபிஎஸ், ஒரு சில சமரசங்களை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். 2021 தேர்தலில் உங்களை அழைக்காதது ஈபிஎஸ் செய்தது தவறு தான்.

ஆனால் இப்போது இருக்கும் சூழலில் நீங்கள் ஈபிஎஸ்சுடன் இணைந்தால் மட்டுமே மீண்டும் வலுவான அதிமுக அமையும் என்று அனைவரும் நினைக்கின்றோம். நீங்கள், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூன்று பேரும் இணைந்தால் அது ஒரு சமூதாயத்திற்கான கட்சியாக இருக்கும் என்ற விமர்சன வலையத்திற்குள் அதிமுக சிக்கிவிடும். மேற்கு மண்டத்தில் ஈபிஎஸ்சும், தென் மண்டலத்தில் நீங்களும் இருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

அதற்கு நீங்கள் ஈபிஎஸ்சுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போது தான் ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்ற முடியும். ஈபிஎஸ்சும் உங்களை இணைத்து செயல்படும் முடிவில் தான் இருக்கிறார்" என சசிகலாவிடம் கூறவுள்ளனர். சசிகலாவுடன் பேச்சுவார்த்தை முயற்சி எந்த அளவிற்கு ஈபிஎஸ்க்கு கைகொடும் என்பதை காலம் தான் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

மேலும் ஈபிஎஸ் தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு சசிகலா சம்மதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி சம்மதித்தால் சசிகலா என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும் என்றே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்:முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூடுதல் மனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.