சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை. 25) காலை டெல்லிக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் டெல்லி செல்கின்றனர்.
பிரதமருடன் சந்திப்பு
டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகின்றனர்.
சசிகலா ஆடியோ
இந்தச் சந்திப்பில் மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சசிகலா தரப்பில் அடுத்தடுத்து ஆடியோ வெளியாகிய நிலையில் அவர் குறித்தும் பேசப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்