ETV Bharat / state

"நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும்" - அமைச்சர் மெய்யநாதன் அறிவித்த புதிய திட்டம்! - சுற்றுசூழல்துறை அமைச்சர்

தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் நிலத்தில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கரில் காடு ஒன்றினை உருவாக்க உள்ளதாக சட்டப்பேரவையில் சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

Environment Minister has announced a forest will be created like for Tamil can be seen even from the moon
நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் வனத்தை உருவாக்க உள்ளதாக சுற்றுசூழல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
author img

By

Published : Apr 14, 2023, 10:12 AM IST

சென்னை: தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுற்றுசூழல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும்,பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல தானங்களை வழங்கினாலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2 கோடி 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். பசுமை சைதை திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அப்பகுதியை பசுமையாக மாற்றி இருப்பதாகவும், பள்ளி கல்வி துறை அமைச்சர் பசுமை பள்ளிகளை உருவாக்கி தந்து இருக்கிறார் என்றார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 70 லட்சம் மரங்களுக்கு 275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதே போன்று உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் பனை விதை வழங்கியுள்ளார். இது போன்று மரம் வளர்ப்பதில் முன்னோடியாக இருக்கிறார்கள். பூமிக்கு மனதார மரங்களை தானமாக கொடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

நாமெக்கெல்லாம் மூத்த மொழியான தமிழை சிறப்பிக்கும் வகையில் முத்தாய்ப்பாக நிலவில் இருந்து பார்த்தாலும் நிலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: CMDA: வடசென்னை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.